‘நீட்’ தேர்வை ஒழுங்காக நடத்தாதவர்கள் மருத்துவ கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது - திமுக எம்.பி கனிமொழி


‘நீட்’ தேர்வை ஒழுங்காக நடத்தாதவர்கள் மருத்துவ கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது - திமுக எம்.பி கனிமொழி
x
தினத்தந்தி 22 Oct 2020 1:34 AM IST (Updated: 22 Oct 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வை ஒழுங்காக நடத்தாதவர்கள் மருத்துவ கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க எம்.பி கனிமொழி தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

2020 ‘நீட்’ தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையை சேர்ந்த மாணவர் சாய் அக்‌ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்ஜியம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியம் ஆகும்?. 

இதேபோல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவ கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story