வங்கக்கடலில் பாரதீப் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் - ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில், பாரதீப்பிற்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில் சென்னை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை,
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் பாரதீப்பிற்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 23ம் தேதி மேற்கு வங்கம் சாகர் தீவுகள் அருகே கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் தூர எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டது.

Related Tags :
Next Story