மாநில செய்திகள்

இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது + "||" + U.N. Rural arts Award on for Kovai Youth for first time in India

இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது

இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது
இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞர் கலையரசனுக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,

கோவையில் கல்லூரி மாணவர்களை வைத்து கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில், ‘கிராமிய புதல்வன்’ கலைக்குழுவை நடத்தி வருபவர் கலையரசன். தமிழக அரசின் கலைப்பிரிவில் தூதராகவும் உள்ள இவர், கிராமிய கலைகளில் பல உலக அளவிலான சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.


இந்நிலையில் ஐ.நா. சபையின் பவள விழாவையொட்டி கலைஞர்களை கவுரவப்படுத்தும் விதமாக, இந்தியாவில் முதன் முறையாக கலையரசனுக்கு கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கலையரசன், தற்போதயை குழந்தைகளுக்கு கிராமிய கலைகள் குறித்து தெரியவில்லை என்றும் நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவைற்றை நாம் மறந்து வருவதாகவும் கூறினார்.

இந்த நிலை இன்னும் நீடிக்காமல் இருக்க, ஆரம்ப கல்வி முதல் பட்டப்படிப்பு வரை கிராமிய கலைகளை, நாட்டுப்புறக்கல்வி என்ற முறையில் பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.