சென்னையில் புறநகர் மின்சார ரெயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும்- முதல்வர் கடிதம்


சென்னையில் புறநகர் மின்சார ரெயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும்- முதல்வர் கடிதம்
x
தினத்தந்தி 23 Oct 2020 12:49 PM IST (Updated: 23 Oct 2020 12:49 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், வேலை நிமித்தமாக செல்லும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். எனினும், சென்னையில் புறநகர் ரெயில் சேவை எப்போது இயக்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  இந்த மாத துவக்கத்தில் இருந்து புறநகர் ரெயில், அரசு ஊழியர்களுக்காக இயக்கப்படுகிறது. எனினும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், சென்னையில் புற நகர் ரெயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே கடந்த செப்டம்பர்  2 ஆம் கோரிக்கை விடுத்ததை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் பழனிசாமி, ரெயில்சேவையை தொடங்குவது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் எனவும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

Next Story