நடிகர்கள் சம்பளக் குறைப்பு விவகாரத்தில் தலையிட அரசுக்கு முகாந்திரம் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ


நடிகர்கள் சம்பளக் குறைப்பு விவகாரத்தில் தலையிட அரசுக்கு முகாந்திரம் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 23 Oct 2020 9:33 AM GMT (Updated: 23 Oct 2020 9:33 AM GMT)

நடிகர்கள் சம்பளக் குறைப்பு விவகாரத்தில் தலையிட அரசுக்கு முகாந்திரம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவரின் 378வது பிறந்தநாள் விழா, கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். அவரிடம் நடிகர்கள் சம்பளக் குறைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து இது குறித்து முடிவெடுக்க வேண்டும். இதில் தலையிடுவதற்கு அரசுக்கு முகாந்திரம் இல்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக கொரோனா பேரிடர் காலத்தில் பல படங்கள் முடிக்கப்படாமல் இருப்பதால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதை தடுக்க நடிகர்கள் தங்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story