தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக சென்னையில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ள தகவலின்படி,
* தீபாவளியை முன்னிட்டு, வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* சென்னையில் 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* அக்டோபர் 24,25,26,31 நவம்பர் 1,7,8-ம் தேதிகளில் 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும்.
* தி.நகர், புரசைவாக்கம், வள்ளலார்நகர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவர ஏதுவாக பேருந்துகள் இயக்கப்படும்.
* சிறப்பு பேருந்துகளை எளிதாக அடையாளம் காண, பேருந்தின் முகப்பில் தீபாவளி சிறப்பு பேருந்து என ஸ்டிக்கர் இருக்கும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story