மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28 ஆம் தேதி முதல் அமைச்சர் ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வரும் 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையின் போது பண்டிகை காலம் என்பதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் எனத்தெரிகிறது.
Related Tags :
Next Story