தமிழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு முடிவுக்கு பிறகே கலந்தாய்வு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு முடிவுக்கு பிறகே கலந்தாய்வு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 24 Oct 2020 8:07 PM IST (Updated: 24 Oct 2020 8:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தைப் பொறுத்தவரை 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே இது குறித்து தெளிவான அறிக்கையை தமிழக முதலமைச்சர் வெளியிட்டிருப்பதாலும், இந்த விவகாரம் தற்போது ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாலும் தான் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசால் அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story