இன்று ஆயுத பூஜை - கவர்னர் வாழ்த்து


இன்று ஆயுத பூஜை - கவர்னர் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Oct 2020 5:00 AM IST (Updated: 25 Oct 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.

சென்னை,

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆயுதபூஜை பண்டிகை தீய சக்திகளின் மீது நல்ல சக்திகளின் வெற்றியைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டங்களில் மனித இனத்தை பேணி பாதுகாக்கும் துர்க்கை அன்னையை போற்றி பாடுகின்றோம். பத்தாம் நாளில் பகவான் ஸ்ரீராமர் மற்றும் துர்க்கை அன்னையின் வெற்றியை விஜயதசமியாக நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் கொண்டாடுகின்றோம்.

இந்த விஜயதசமி நன்னாள், நம் வாழ்வில், உண்மையாயிருத்தல், நன்மை செய்தல் மற்றும் நேர்மையை வெளிப்படுத்துதல் ஆகிய நற்பண்புகளை நிலைநிறுத்தி, நம் குடும்பங்களில் என்றும் கண்டிராத வளத்தையும், வளர்ச்சியையும் அளிக்கும் புதிய ஆற்றலைப் பறைசாற்றுவதாய் அமையட்டும். இந்த திருவிழா நம் மாநிலத்திலும், நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், வளம் மற்றும் நல்ல உடல் நலத்தை நல்கிட வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Next Story