7.5% இட ஒதுக்கீடு மசோதா விவகாரம்: பன்வாரிலால் புரோகித்தை மீண்டும் சந்திக்கிறார் முதலைமைச்சர் பழனிசாமி?


7.5% இட ஒதுக்கீடு மசோதா விவகாரம்: பன்வாரிலால் புரோகித்தை மீண்டும் சந்திக்கிறார் முதலைமைச்சர் பழனிசாமி?
x
தினத்தந்தி 25 Oct 2020 2:33 PM IST (Updated: 25 Oct 2020 3:51 PM IST)
t-max-icont-min-icon

7.5 % உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலைமைச்சர் பழனிசாமி மீண்டும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சென்னை,

7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்துவது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலைமைச்சர் பழனிசாமி இன்று  மீண்டும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த சந்திப்பின் போது 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநரை முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதா நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

Next Story