சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை
சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் திருமாவளவனை கண்டித்து நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை விதித்துள்ளது.
கடலூர்,
பெண்களை பற்றி திருமாவளவன் இழிவாக பேசியதாக சிதம்பரத்தில் நாளை பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக மகளிரணி சார்பில் குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் எம்.பி-யாக உள்ள சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவே ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story