பவானிசாகர் அணை நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.69 அடியாக உள்ளது.
ஈரோடு,
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு 105 அடியாகும். அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.86 அடியாக இருந்தது. அணைக்கு ஒரு வினாடிக்கு 554 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர் இருப்பு 27 டிஎம்சி ஆக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 3,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.69 அடியாக உள்ளது. அணைக்கு ஒரு வினாடிக்கு 878 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 26.9 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 3,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story