அராஜகத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம்- குஷ்பு டுவிட்
தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார்.
சென்னை,
திருமாவளவனை கண்டித்து இன்று நடைபெற இருந்த பா.ஜ.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை விதித்தது. சிதம்பரத்தில் இன்று பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். இதில், குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போலீசார் விதித்த தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்திற்கு, குஷ்பு இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டுச்சென்றனர். முட்டுக்காடு அருகே குஷ்பு சென்ற போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைதான பிறகு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, “ அராஜகத்துக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். பெண்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடுவோம்” என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story