பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு
திண்டுக்கல்லில் பெரியார் சிலை மீது இரவு காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த பெரியார் சிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவில் காவி சாயத்தை பூசியுள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அங்கு சென்ற ஒட்டன்சத்திரம் போலீசார், இரவில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு பெரியார் சிலையில் புதிய வர்ணம் பூசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளிக்கவும் மக்கள் கலைந்து சென்றனர். போலீசாரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்ட திமுகவினர், 2015-ம் ஆண்டு சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி சிசிக்குமாரே இப்போதும் சிலையை அவமதித்துள்ளார் என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
சிலையை பார்வையிட்ட பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், கண்டனத்தை பதிவு செய்தததுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story