வானதி சீனிவாசனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வாழ்த்து
வானதி சீனிவாசனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், வானதி சீனிவாசனுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக-வின் தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்திலிருந்து வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் பணி மென்மேலும் சிறந்தோங்கிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story