கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம்; சென்னை ஐகோர்ட்டில் யூஜிசி பதில் மனு தாக்கல்


கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம்; சென்னை ஐகோர்ட்டில் யூஜிசி பதில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 29 Oct 2020 11:18 AM IST (Updated: 29 Oct 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என சென்னை ஐகோர்ட்டில் யூஜிசி பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.

சென்னை

அரியர் மாணவர்களக்கு தேர்ச்சி அளித்து, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, சென்னை பல்கலை வரம்பிற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் யுஜிசி பதில் மனுவில் இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை.

இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது. செப்டம்பர் 30க்குள் இறுதி பருவத் தேர்வு நடத்தாவிட்டால்  கால அவகாசத்தை  நீட்டிக்க  கோரலாம். இறுதி பருவ தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என கூறி உள்ளது.


Next Story