சென்னை நந்தனத்தில் வணிகவரி, பதிவுத்துறை அலுவலக கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை நந்தனத்தில் வணிகவரி, பதிவுத்துறை அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதியன்று சட்டசபையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த 2 வணிகவரி அலுவலகங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி வேப்பேரியில் கட்டப்பட்ட வடசென்னை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் கடந்த நவம்பர் 19-ந் தேதியன்று திறந்து வைத்தார்.
தற்போது கிண்டி வட்டம், நந்தனத்தில் ரூ.73.17 கோடி மதிப்பீட்டில் 7 தளங்கள், 60 வணிகவரி அலுவலகங்கள் மற்றும் 7 பதிவுத்துறை அலுவலகங்களை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டிடத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
ஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனம், கூட்டாண்மை சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ், சென்னை கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நன்கொடையாக நிறுவியுள்ளது.
இந்த மையத்தில் 10 படுக்கை களும், ஒரு செவிலியர் பணிப் பகுதி, அவசர சிகிச்சைக்கான பிராணவாயு இணைப்புகள் மற்றும் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் உள்ளன. மருத்துவமனைக்குள் கொரோனா சிகிச்சைக்காக எங்கெல்லாம் அவசர பிரிவின் அவசியம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மையத்தை எடுத்துச் செல்லலாம்.
நோயாளிகளை ஒரே இடத்தில் இருந்து கவனிக்க மைய கண்காணிப்பு வசதியும், புகைப் படக் கருவிகளும் இதில் உள்ளன. இத்தகைய வசதிகள் கொண்ட இந்தியாவிலேயே முதல் மையம் இதுவாகும்.
தகவல் தொழில் நுட்பவியில் துறையின் 2017-18-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழக மக்கள் அனைவரும் வலைதளம் வாயிலாக கருத்துக் கணிப்புகள், ஆய்வுகள், விவாதங்கள் போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று அதன்மூலம் தமது கருத்துக்களை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் வலைப்பதிவுகள் மூலமாக அரசுக்கு தெரிவிக்க உதவும் வகையில் “நமது அரசு“ என்ற பொதுமக்களுக்கான தமிழ்நாடு அரசின் வலைதளம், தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி “நமது அரசு” என்ற அரசின் வலைத்தளம்(http://tamilnadu.myg-ov.in) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளம், அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கும், அரசுக்குமிடையே உரையாடல்கள் வாயிலாக கருத்துப் பரிமாற்றம் செய்து, மக்கள் நலன் தொடர்பான சம்பவங்களில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் தளமாக இருந்து, மக்களுக்கும் அரசுக்குமிடையில் ஒரு புதிய நல்லுறவை மின்னணு வழியில் ஏற்படுத்த உதவும்.
மேலும், கலந்துரையாடல், செயல்பாடுகள், தகவல்களை பரப்புதல், படைப்புத்தளம், கருத்துக்களம், கருத்துக்கணிப்புகள் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் வாக்கெடுப்புகளின் அடிப்படையில் அரசு சேவைகளை செம்மையாக செயல்படுத்த இது உதவும்.
மேலும், தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து கருத்துக் கணிப்புகளைப் பெற்று, ஆக்கப்பூர்வமான மக்களின் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை வகுக்கவும் அரசுக்கு உறுதுணையாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story