மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி


மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 30 Oct 2020 10:17 AM IST (Updated: 30 Oct 2020 10:17 AM IST)
t-max-icont-min-icon

மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முதல் அமைச்சர் பழனிசாமி கூறினார்.

மதுரை

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

நிகழ்ச்சியில்அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்

பின்னர் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளது.

மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.


Next Story