ஆளுநருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு


ஆளுநருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 30 Oct 2020 5:45 PM IST (Updated: 30 Oct 2020 6:14 PM IST)
t-max-icont-min-icon

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

சென்னை,

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை  வந்தார். 

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதல் அமைச்சர் பழனிசாமி,  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிதம்  உள் இட ஒதுக்கீடு வழங்கும்  மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார். 

Next Story