மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் அரசியல் வாழ்க்கை
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் காலமானார்.
சென்னை,
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
அமைச்சர் துரைக்கண்ணு, 1948ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் பிறந்தார். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்தார்.
அவரது அரசியல் பயணம் எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கியது. அ.இ.அ.தி.மு.க. துவங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்த இவர், மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாபநாசம் ஒன்றியத்தின் அ.இ.அ.தி.மு.க செயலராகவும், மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் துரைக்கண்ணு இருந்துள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மனைவியும் இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 3 முறை (2006, 2011, 2016) வெற்றிபெற்றவர் அமைச்சர் துரைக்கண்ணு.
2016ஆம் ஆண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று வேளாண்துறை அமைச்சராகப் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர். அதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2006, 2011 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் இந்த முறைதான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 15 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டையாக மாற்றி காட்டிய அமைச்சர் துரைகண்ணு
Related Tags :
Next Story