அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது - திமுக எம்.பி.கனிமொழி
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story