பருவநிலையால் நிலைமை மோசமாகி வருகிறது: கொரோனா விஷயத்தில் கவனம் தேவை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பருவநிலையால் நிலைமை மோசமாகி வருகிறது என்று கொரோனா விஷயத்தில் கவனம் தேவை என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 5.73 லட்சம் பேர் பாதிப்பு. கொரோனா குறைந்து விட்டதாக கருதி, அலட்சியம் காட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைத்துக் கொண்டதன் விளைவு தான் இது. எச்சரிக்கை தேவை.
அலட்சியம் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும். எனவே, வெளியில் செல்லும்போது முக கவசம், கையுறை, சமூக இடைவெளி மிகவும் அவசியம். வீடு திரும்பியதும் கை கழுவுதல் கட்டாயம். பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கொரோனா தொற்று குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். எனது எச்சரிக்கைகளை பலர் செவி மடுத்தனர். சிலர் உதாசீனப்படுத்தினர். பண்டிகை மற்றும் பருவநிலையால் நிலைமை மோசமாகி வருகிறது. இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல. எச்சரிக்கை, கவனம் தேவை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story