மருத்துவக் கலந்தாய்வு தேதி ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் - சுகாதாரத்துறை தகவல்


மருத்துவக் கலந்தாய்வு தேதி ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் - சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2020 12:41 PM IST (Updated: 2 Nov 2020 12:41 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவக் கலந்தாய்வு தேதி ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதற்கு தமிழக ஆளுநர் காலதாமதம் செய்ததால் தமிழக அரசு கலந்தாய்வு பணியைத் தொடங்க முடியாமல் இருந்துவந்தது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 18-ம் தேதிக்கு முன்பாக முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு நாட்களில் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

Next Story