தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு 5 இடங்களில் இருந்து புறப்படும்- முழு விபரங்கள்


தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு 5 இடங்களில் இருந்து புறப்படும்-  முழு விபரங்கள்
x
தினத்தந்தி 3 Nov 2020 4:46 PM IST (Updated: 3 Nov 2020 4:46 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 16026 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்தாண்டு 14,757பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்துதுறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக  ஐ.டி.நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை விட குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படவுள்ளது

அந்த வகையில் வரும் 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரையில் சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5 ஆயிரத்து 247 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 757 பேருந்துகள்  இயக்கப்படவுள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 16026 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டுகளை போல சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. செங்குன்றம் வழியாக கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மார்கமாக செல்லும் பேருந்துகள் கே,.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும்

திண்டிவனம் , விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம் தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அன்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும்,  வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், ஓசூர், தருமபுரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படவுள்ளன.

தாம்பரம் ரெரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நெய்வேலி, சிதம்பரம், வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கும், திருச்சி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற நான்கு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

பேருந்துகளை  முன்பதிவு செய்ய கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 10  முன்பதிவு மையங்களும், தாம்பரம் எம்இபிஇசட் பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து  நிலையத்தில் 1 மையம் என மொத்தம் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.


Next Story