தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் - ஐகோர்ட் மதுரை கிளை


தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் - ஐகோர்ட் மதுரை கிளை
x
தினத்தந்தி 4 Nov 2020 4:14 PM IST (Updated: 4 Nov 2020 4:14 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் - ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை:

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

தமிழில் வழியில் படித்து டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கு 20% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பலர் இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாக மதுரையை சேர்ந்த சக்திராவ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் வழியில் படித்தவர்கள் பள்ளியிலிருந்தே தமிழ் வழி பயின்றவர்களா? என கேள்வி எழுப்பினர். பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா?.தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும். 

தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  


Next Story