ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2020 6:33 PM IST (Updated: 5 Nov 2020 6:33 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவை,

நீலகிரி, திருப்பூரில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர்  பழனிசாமி இன்று மாலை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். 

கோவை விமானநிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 

கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர். 

7 பேர் விடுதலைக்கு குரல் கொடுத்தது அதிமுக அரசு தான். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. வேல் யாத்திரைக்கு சட்டரீதியாக அனுமதி வழங்க முடியாது. பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படும். இந்தியாவில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். 

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Next Story