அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல்


அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 6 Nov 2020 9:12 AM IST (Updated: 6 Nov 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் அனுப்பியது பெரும் சர்ச்சையானது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை நீக்க வேண்டும் என கட்சிகள் கோரிக்கை வைத்தன.

தமிழக அரசும், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என பதில் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. மேலும் அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற கோரி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வீரப்பன் என்ற பெயரில் வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story