பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பேரறிவாளனை 30 நாட்களில் பரோலில் விடுவிக்க அனுமதி அளித்தது. இதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
பேரறிவாளனின் பரோல் காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுதால் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story