தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் வெற்றி பெறும் - பிரேமலதா விஜயகாந்த்


தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் வெற்றி பெறும் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 6 Nov 2020 6:11 PM IST (Updated: 6 Nov 2020 6:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் வெற்றி பெறும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

‘‘வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும். திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடு, முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. 

தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும். அதிமுக ஆட்சியை நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக தேமுதிக பார்க்கிறது’’ என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Next Story