கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி - யூஜிசி நிபந்தனை
கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை,
கல்லூரிகளை திறப்பது தொடர்பாக பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல்களை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.
அதில்,
* கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும்.
* கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் வரும் விடுதி மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
* கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வந்தாலும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
* மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்
மாணவர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடம் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுரை வழங்கி உள்ளது.
நடைமுறையில் இது போன்றவை சாத்தியமில்லை என்பதால் உயர்கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படுமா? மற்றும் விடுதிகள் செயல்படுமா? என மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
Related Tags :
Next Story