3-வது நாளாக வேல்யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது


3-வது நாளாக வேல்யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது
x
தினத்தந்தி 9 Nov 2020 1:41 PM IST (Updated: 9 Nov 2020 1:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் தடை உத்தரவை மீறி வேல்யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. சார்பில் ‘வெற்றிவேல் யாத்திரை’ முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் கடந்த 6-ந்தேதி திருத்தணியில் தடையை மீறி கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.க.வினர் யாத்திரையை தொடங்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர்.

இந்தநிலையில் ‘வேல் தொடர்ந்து துள்ளி வரும். திட்டமிட்டபடி எல்லா இடங்களிலும் யாத்திரை நடைபெறும். யாத்திரையின் 2-வது நாள் பயணம் 8-ந்தேதி (நேற்று) சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து தொடங்கும்’ என்று எல்.முருகன் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சென்னை திருவொற்றியூரில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை விடுவித்தனர்.

இந்நிலையில் எல்.முருகன் 3-வது நாள் பயணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தடையை மீறி வேல்யாத்திரை மேற்கொள்ள முயன்றார். தமிழக அரசின் தடை உத்தரவை மீறி வேல்யாத்திரை செல்ல முயன்றதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். 3வது நாளாக வேல்யாத்திரை செல்ல முயன்ற பாஜகவினர் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டனர்.

Next Story