பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி


பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
x
தினத்தந்தி 9 Nov 2020 5:22 PM IST (Updated: 9 Nov 2020 5:22 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை, 

பட்டாசு வெடிக்க தடை விதிப்பதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும், பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. 

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, நலிவடைந்த நிலையில் உள்ள பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வுக்கு மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் என்ன தொழிற்சாலைகளை அமைக்கலாம் என்பதை மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய, மாநில தொழில்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, டிசம்பர் 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story