"சாயக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் சாய தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும்" - அமைச்சர் கே.சி.கருப்பணன்


சாயக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் சாய தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன்
x
தினத்தந்தி 9 Nov 2020 10:51 PM IST (Updated: 9 Nov 2020 10:51 PM IST)
t-max-icont-min-icon

சாயக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் சாய தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள 17 கூட்டுறவு நெசவாளர் சங்க வங்கிகள் மூலம், 2 ஆயிரத்து 346 நெசவாளர்களுக்கு சுமார் 70 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் கருப்பணன் நெசவாளர்களுக்கு போனஸ் தொகையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன்,  சாயக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் சாய தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும். 

கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கழிவுநீரை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்தார். 

Next Story