தேர்வை எழுதமுடியாமல் போன இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு அட்டவணை வெளியீடு


தேர்வை எழுதமுடியாமல் போன இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 10 Nov 2020 7:24 AM IST (Updated: 10 Nov 2020 7:24 AM IST)
t-max-icont-min-icon

தேர்வை எழுதமுடியாமல் போன இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வை சமீபத்தில் ஆன்லைன் மூலம் நடத்தி முடித்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை நடத்தியது. இதை 93 சதவீதம் மாணவர்கள் எழுதினார்கள்.

இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மறுதேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் பாடவாரியான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சென்று அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வும் ஒரு மணி நேரம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story