32 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

32 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
x
தினத்தந்தி 10 Nov 2020 3:31 PM IST (Updated: 10 Nov 2020 3:31 PM IST)
t-max-icont-min-icon

32 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னையில் உள்ள ஜூவல்லரி நிறுவனங்கள் உட்பட 32 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஜூவல்லரியில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கத்திலுள்ள  அதன் உரிமையாளர்  பங்களா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த  ஜூவல்லரி நிறுவனம் தங்க நகை மொத்த வியாபாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதால், இவர்களின் வணிக தொடர்பின் அடிப்படையில் மும்பையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் சர்ச்சையில் சிக்கிய தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள ஒரு  நகை கடையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story