காருக்குள் இளம்பெண்ணிடம் அத்துமீறல் கைக்கடிகாரத்தில் கேமரா வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய காசி
காருக்குள் இளம் பெண்ணிடம் அத்துமீறிய நாகர்கோவில் காசி, அதனை கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் பதிவு செய்து மிரட்டியதாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை
காருக்குள் இளம் பெண்ணிடம் அத்துமீறிய நாகர்கோவில் காசி, அதனை கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் பதிவு செய்து மிரட்டியதாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை காதலிப்பது போல் நடித்து கடைசியில் அவர்களின் வாழ்க்கையில் விளையாடிய நாகர்கோவில் காசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே காசி மீது ஐந்து பெண்கள் புகார் கொடுத்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காசி மீது புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது சிபிசிஐடி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் காசி அதிர்ச்சி தகவல் ஒன்றை என்று கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சென்னை இளம்பெண்ணுக்கு காதல் வலை வீசியதாகவும், காசியின் மீது நம்பிக்கை வந்த அந்த இளம்பெண் ஒரு கட்டத்தில் காதலனை தேடி கன்னியாகுமரிக்கு சென்றதாகவும் அப்போது ஒரு காரில் வைத்து அந்த இளம்பெண்ணிடம் காசி அத்துமீறியதாகவும், அந்த சம்பவங்களை எல்லாம் தனது கை கடிகாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவு செய்து கொண்ட காசி, பின்னர் அதை காட்டி மிரட்டி அவரிடம் பல முறை அத்துமீறி உள்ளதாக விசாரணையில் கூறியுள்ளார்.
ஆனால், நடந்த சம்பவங்கள் எல்லாம் அந்த இளம்பெண் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வந்துள்ளார். காசி மீது பெண்கள் பலரும் புகார் அளித்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தற்போது அந்த மாணவி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காசி மீது மேலும் பல பெண்கள் புகார் அளிக்க முன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story