காசியின் லேப்டாப் - செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் மீட்பு
நாகர்கோவில் காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் மீட்டுள்ளனர்.
சென்னை
சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை காதலிப்பது போல் நடித்து கடைசியில் அவர்களின் வாழ்க்கையில் விளையாடிய நாகர்கோவில் காசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே காசி மீது ஐந்து பெண்கள் புகார் கொடுத்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காசி மீது புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்டுள்ள வீடியோக்கள் மற்றும் படங்களை பகிர்ந்துகொண்ட அவனது நண்பர்கள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே 5 நாள் காவல் முடிந்து காசியை நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீசார் ஒப்படைக்கின்றனர்.20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் புகார் தெரிவிக்கும் பெண்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story