பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக தனி அமைப்புசாரா நலவாரியம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக தனி அமைப்புசாரா நலவாரியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்தும் மற்றும் அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களின் செயல்பட்டுகள் குறித்தும் மாவட்ட உயர் அலுவலர்களுடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
முன்னதாக நிகழ்ச்சியில், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
* மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற அடிப்படையில் வேல்யாத்திரைக்கு அனுமதி இல்லை.
* பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக தனி அமைப்புசாரா நலவாரியம் அமைக்கப்படும்.
* தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
* கொரோனா இருப்பது தெரிந்தால் மருத்துவக்குழு நேரில் செல்கிறது.
* கொரோனா காலத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு உதவி.
* பட்டாசு தொழிலுக்காக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்டோம்.
* புதிய அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
* கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை.
*7 தமிழர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆளுநருக்கு உத்தரவிட முடியாது.
*ஸ்டாலின் கீழ்தரமான அரசியல் செய்கிறார். அவரது அப்பா இறப்பில் கூட எனக்கு சந்தேகம் கருதுகிறது.
* அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் என்ன மர்மம் உள்ளது என ஸ்டாலின் தான் கூறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story