8 மாதங்களுக்கு பிறகு தமிழகம் - கர்நாடகா இடையே அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம் - கர்நாடகா இடையிலான அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் கர்நாடக பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. தமிழக பஸ்கள் கர்நாடகத்திற்குள் வரவில்லை. அதன் பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 4 மாதங்களாக ஆந்திரா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடகத்தில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்துதமிழக அரசு அனுமதி வழங்காததை அடுத்து கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. இதையடுத்து இந்த பஸ்கள் அத்திப்பள்ளி வரை இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி பயணிகளின் வசதிக்காக தமிழகம் - கர்நாடகா மாநிலம் இடையே அரசு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி தமிழக அரசு அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கும் அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடக அரசு பஸ்கள், தமிழகத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி வரை 6 நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story