அதிமுக-வின் நிர்வாக வசதிக்காக 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
அதிமுக-வின் நிர்வாக வசதிக்காக திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமணம்.
திருப்பூர் புறநகர் மேற்குமாவட்ட செயலாளராக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமணம்.
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி. சி.மகேந்திரன் நியமணம்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் விஜயாஸ்கர் நியமணம்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக பி.கே. வைரமுத்து நியமணம்.
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக எம்.பி., வைத்திலிங்கம் நியமணம்.
விருநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன் நியமணம்.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமணம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story