"அகந்தை எனும் இருள் விலகி ஆனந்தம் எனும் ஒளி பெருக வாழ்த்துகிறேன்" முதலமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அகந்தை எனும் இருள் விலகி ஆனந்தம் எனும் ஒளி பெறுக வாழ்த்துகிறேன். இன்பங்கள் பெருகி அனைத்து நலமும் வளமும் பெற்று ஒற்றுமை, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்த இனிய நாளில், நம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட, எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வு அமைந்திட, என் தீப ஒளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story