சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 13 Nov 2020 9:30 PM GMT (Updated: 13 Nov 2020 9:04 PM GMT)

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

இதுகுறித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் மற்றும் கட்சிப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் அ.தி.மு.க. சார்பில் கீழ்காணும் மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி-கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு.

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம்-தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர், அரியலூர்.

அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன்-சேலம் மாநகர், சேலம் புறநகர்.

கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை-ராணிப்பேட்டை.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்- திண்டுக்கல் மேற்கு.

செங்கோட்டையன்-எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் செங்கோட்டையன்-ஈரோடு புறநகர், தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு).

அமைப்புச் செயலாளர் நத்தம் விசுவநாதன்-திண்டுக்கல் கிழக்கு, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு.

அமைச்சர் பி.தங்கமணி-நாமக்கல், ஈரோடு மாநகர், திருச்சி புறநகர் தெற்கு.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-கோவை புறநகர் தெற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, நீலகிரி.

டி.ஜெயக்குமார்-சி.வி.சண்முகம்

அமைச்சர் டி.ஜெயக்குமார்-வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு).

அமைப்புச் செயலாளர் செ.செம்மலை-புதுச்சேரி மாநிலம்.

அமைப்புச் செயலாளர் என்.தளவாய்சுந்தரம்-கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு.

அமைச்சர் செல்லூர் ராஜூ-மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு.

அமைச்சர் சி.வி.சண்முகம்- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு.

அமைச்சர் கே.பி.அன்பழகன்-தருமபுரி, திருவண்ணாமலை வடக்கு.

அமைச்சர் ஆர்.காமராஜ்-திருவாரூர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்-நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

ஆர்.பி.உதயகுமார்-ஜே.சி.டி.பிரபாகர்

இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி-சென்னை புறநகர், செங்கல்பட்டு மேற்கு.

அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர்-வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு).

அமைப்புச் செயலாளர் எஸ்.கோகுல இந்திரா-காஞ்சீபுரம்

அமைப்புச் செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன்-தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு).

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்-மதுரை புறநகர் மேற்கு, தேனி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு.

அமைச்சர் எம்.சி.சம்பத்-கடலூர் மத்தியம்.

அமைச்சர் கே.சி.வீரமணி-திருப்பத்தூர்.

க.பாண்டியராஜன்

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்-கரூர், திருச்சி புறநகர் வடக்கு.

அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர்-புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, சிவகங்கை.

அமைப்புச் செயலாளர் ப.மோகன்-திருவண்ணாமலை தெற்கு.

அமைப்புச் செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன்-வேலூர் மாநகர், வேலூர் புறநகர்.

அமைச்சர் க.பாண்டியராஜன்-செங்கல்பட்டு கிழக்கு.

அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன்-திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு.

மேற்கண்ட நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story