சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரம் இயங்கும் தகவல் மையம் திறப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரம் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் தகவல் மையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிலும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மைய சேவையை நாளை (ஞாயிற்றுக்கிழம்ை-) முதல் ஜனவரி 20-ந் தேதி வரை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக 1800 425 1757 என்ற எண்ணில் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தென்காசி மாவட்டம் புளியரை, தேனி மாவட்டம் வீரபாண்டி, கோவை மாவட்டம் நவக்கரை, பொள்ளாச்சி அருகே ராமநாதபுரம் கிராமம் ஆகிய இடங்களில் அய்யப்ப பக்தர்கள் பயன்பெறும் வகையில் தகவல் மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story