சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
x
தினத்தந்தி 14 Nov 2020 3:22 AM GMT (Updated: 14 Nov 2020 3:22 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் செய்யாமல் விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story