குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்!


குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்!
x
தினத்தந்தி 14 Nov 2020 5:39 PM IST (Updated: 14 Nov 2020 5:39 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.

சென்னை,

நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தீபாவளிப் பண்டிகையை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன் உள்ளிட்டோருடன் கொண்டாடினார்.

பண்டிகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சௌந்தர்யா தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் பட்டாசு வெடிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, ரஜினிகாந்த் போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் இருந்தபடியே வெளியே குவிந்திருந்த ரசிகர்களைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story