தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது - தீயணைப்புத்துறை தகவல்
தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் நேரிட்டுள்ளன. இதில், ராக்கெட் வெடியால் 84 தீ விபத்துகளும், மற்ற பட்டாசுகளால் 22 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 40 இடங்களில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக தீ விபத்து நேரிட்டுள்ளது. இதில், ராக்கெட் வெடியால் 33 தீ விபத்துகளும், மற்ற பட்டாசுகளால் 7 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துகளில் 90 சதவீதம் மாலை 7 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் நேரிட்டுள்ளது. தீவிபத்து குறித்து 57 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story