ஓடிடி என்பது பூஜை அறை போன்றது; தியேட்டர் என்பது கோவில் போன்றது - நடிகர் சந்தானம்


ஓடிடி என்பது பூஜை அறை போன்றது; தியேட்டர் என்பது கோவில் போன்றது - நடிகர் சந்தானம்
x
தினத்தந்தி 15 Nov 2020 4:31 PM IST (Updated: 15 Nov 2020 4:31 PM IST)
t-max-icont-min-icon

‘பிஸ்கோத்’ சந்தானத்தின் 400-வது படம் ஆகும்.

சென்னை,

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராதன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே.செல்வா கவனிக்கிறார். இது சந்தானத்தின் 400-வது படம் ஆகும்.

இந்நிலையில், சென்னை வடபழனி கமலா தியேட்டரில் ரசிகர்களுடன் தனது பிஸ்கோத் படம் பார்த்த பின் நடிகர் சந்தானம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஓடிடி என்பது பூஜை அறை போன்றது. தியேட்டர் என்பது கோவில் போன்றது.  இரண்டிலும் தெய்வம் உள்ளது. எனது படம் மட்டுமல்ல, அனைத்து படத்தையும் வாழ வைக்கும் தெய்வம் மக்கள் தான் என்றார்.

Next Story