தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற பொதுமக்களுக்கு சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்


தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற பொதுமக்களுக்கு சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x
தினத்தந்தி 15 Nov 2020 5:47 PM IST (Updated: 15 Nov 2020 5:47 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி,சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், சென்னை மற்றும் பிற நகர்களுக்கு திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்ற வகையில் கடந்த 11, 12 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 510 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து 5 ஆயிரத்து 247 பஸ்கள் என ஆக மொத்தம் 14 ஆயிரத்து 757 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

இந்நிலையில்,  தீபாவளி பண்டிகையையொட்டி,சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், சென்னை மற்றும் பிற நகர்களுக்கு திரும்புவதற்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 4 நாட்களுக்கு சுமார் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கமான 2 ஆயிரம் பேருந்துகளுடன் சென்னைக்கு ஆயிரத்து 395 சிறப்பு பேருந்துகளும், சென்னை நீங்கலாக பிற நகரங்களுக்கு ஆயிரத்து 915 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

வருகிற 18ஆம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் வழக்கமான 2 ஆயிரம் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

4 நாட்களும் 8 ஆயிரத்து 26 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 16 ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Next Story