தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்: மேலும் 2,520 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் மேலும் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 5 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,478 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2,520 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 18,441 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,27,752-ல் இருந்து 7,30,272 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 65,053 மாதிரிகளும் இதுவரை 1,10,72,885 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 64,213 பேருக்கும், இதுவரை 1,07,91,896 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story