பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்


பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Nov 2020 2:22 PM IST (Updated: 16 Nov 2020 2:22 PM IST)
t-max-icont-min-icon

பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழை தொடர்பாக வானிலை மையம் அவ்வப்போது மழை அறிவிப்பு, எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் ஆபத்து மற்றும் விழிப்புணர்வு குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்,

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றைக் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

பழைய கட்டிடங்களில் தங்குவதோ அல்லது அவற்றுக்கு அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ அல்லது கடந்து செல்லவோ வேண்டாம்.

இடி - மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது; மரத்தின் அடியில் நிற்க கூடாது; திறந்தவெளியில் இருக்கக் கூடாது; நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது போன்ற அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது.

Next Story